Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மருத்துவ விசா மோசடியில் 10 லட்சம் ரிங்கிட் வரை சொத்து குவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மருத்துவ விசா மோசடியில் 10 லட்சம் ரிங்கிட் வரை சொத்து குவிப்பு

கோலாலம்பூர் டிச.11-


மருத்துவ விசாவின் கீழ் அந்நிய நாட்டவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில் நிகழ்ந்த மோசடியில் குடிநுழைவுத்துறையின் கீழ் நிலை அதிகாரி ஒருவர் பத்து லட்சம் ரிங்கிட் வரை சொத்துகளை சேகரித்து வைத்துள்ளது உயர்நெறி அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகளிடம் வாக்குமூலம் எடுக்கப்பட்ட போது இந்த விவகாரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவ விசா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த கீழ்நிலை அதிகாரி ஒருவர், பத்து லட்சம் ரிங்கிட் வரை சொத்துகளைச சேர்த்து வைத்திருந்தது கண்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாக அந்த ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்த.

இவ்விவகாரத்தை விரிவாக விசாரணை செய்தால் இன்னும் அதிகமான தகவல்கள் வெளிவரலாம் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →