Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இஸ்லாத்தைத் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாதீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்லாத்தைத் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாதீர்

கோலாலம்பூர், ஜூன்.27-

இஸ்லாமியச் சமயத்தை தங்களின் சுயநலத்திற்காக அரசியல் சாதனமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்தின் தலைவர்களாக வீற்றிருப்பவர்கள் தங்களின் சுய நலத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்று மாமன்னர் அறிவுறுத்தினார்.

இன்று கோலாம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மாஆல் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்துகையில் மாமன்னர் இதனை வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →