தங்காக், டிசம்பர்.08-
வாகனம் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள ஆற்றில் பாய்ந்ததில் பெண் ஒருவர் மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.48 மணியளவில் ஜோகூர், தங்காக், தங்சோங் அகாஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மைய வளாகத்தில் நிகழ்ந்தது.
நிசான் கிராண்ட் லிவினா ரகக் காரில் பயணம் செய்த 20 வயது பெண் நீரில் மூழ்கி மரணமுற்றதாக மூவார் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜாஹைரி ஷுகோர் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் உடலை மீட்கும் நடவடிக்கையில் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.








