கோலாலம்பூர், ஆகஸ்ட்.10-
அக்டோபர் மாதம் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் உண்மை இல்லை என மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான எல்எல்எம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திய இந்தத் தவறானத் தகவலுக்கு எல்எல்எம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது, சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, புதியத் தானியங்கி எண் பலகை அங்கீகார முறைக்கான சோதனை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் எல்எல்எம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.








