18.3 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 26 ஆயிரத்து 286 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் விற்கப்படாமலேயே இருக்கின்றதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நாசிர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 614 வீடுகள் கட்டப்பட திட்டமிடப்பட்டிருந்தன என பூசாட் மக்லூமாட் ஹர்த்த தானா நெகாரா தகவல் வெளியிட்டிருந்தது.
வீடுகள் விற்க்கப்படாமல் இவ்வாறான தேக்க நிலையைத் தவிர்க்க, மாநில, மாவட்டங்களுக்கு ஏற்ப சராசரி ஊதியத்தின் அடிப்படையில் வாங்கும் சக்திக்கேற்ப வீடுகள் திட்டத்தில் அவை சேர்க்கப்படும் என துணை அமைச்சர் நாடாளுமன்றததில் கூறினார்.








