புத்ராஜெயா, ஜனவரி.14-
மலேசிய ஆயுதப்படையின் குத்தகை தொடர்பில் தற்போது நிலவி வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் மேலும் ஒரு மூத்த அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று கைது செய்துள்ளது.
எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏற்கனவே கைதான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குத்தகைத் திட்டத்தில் தொடர்பு உள்ளதா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரி இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
விசாரணைக்காக புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு இருந்த போது அவர் தடுக்கப்பட்டதாக அஸாம் பாக்கி மேலும் கூறினார்.








