ஈப்போ, ஆகஸ்ட்.08-
வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு பாலியல் சேவை வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் தென்னை மரத் தோப்புக்குள் அமைக்கப்பட்ட விபச்சாரக் கொட்டகையைப் போலீசார் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.
ஈப்போ அருகில் உள்ள கம்போங் துவாலாங் 7 இல் உள்ள அந்த விபச்சாரக் கொட்டகையில் போலீசார் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 32 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பெண்களும், நான்கு வங்காளதேசத் தொழிலாளர்களும் பிடிபட்டனர் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.








