Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நிதி வளத்தைப் பொறுதே போக்குவரத்து மேம்பாடுகள்

Share:

கோலாலம்பூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான HSR அதிவேக ரயில் திட்டம், ஜோகூர்பாருவில் LRT ரயில் திட்டம் போன்றவை அமல்படுத்துவதற்கு முன்னதாக நாட்டின் நிதி வளம் உட்பட பலதரப்பட்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இது போன்ற பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், நாட்டின் நிதி வளத்தைப் பொறுத்து அவற்றை கட்டம் கட்டமாக அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் அரசாங்கம் இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காசி, மத்திய அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் கருத்துரைக்கையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News