Oct 16, 2026
Thisaigal NewsYouTube

உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

டிச. 8-

பேரா, சித்தியவானில் உள்ள ஒரு கடையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 870 கிலோகிராம் எடை கொண்ட 1 கிலோ சமையல் எண்ணெய் பேக்கெட்டுகளை பதுக்கி வைத்ததற்காக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த அமைச்சின் பேரா மாநில இயக்குநர் Datuk Kamalludin Ismail கூறுகையில், 1961 கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை பேரா, மஞ்சோங் கிளையின் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது எனக் கூறினார்.

சித்தியவானில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தின் மேல் தளத்தில் 1 கிலோ எடையுள்ள சமையல் எண்ணெய் பேக்கெட்டுகளை மொத்தமாக விற்பனை செய்வதாக, பொதுமக்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கண்காணிப்பு நடத்தியதில், சம்பந்தப்பட்டக் கட்டடம் சில்லறை பொருட்களை விற்பனை செய்யும் ஒரு இரண்டு மாடி கடை என்பது தெரியவந்தது. இந்தக் கடையில் சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு ஆகியவற்றிற்கான சில்லறை கட்டுப்பாட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளது. ஒவ்வொரு வகை கட்டுப்பாட்டு பொருளுக்கும் 500 கிலோகிராம் என்ற சேமிப்பு வரம்பும் உள்ளது.

ஆனால், 1 கிலோ எடையுள்ள 870 சமையல் எண்ணெய் பேக்கெட்டுகளும் 87 கிலோகிராம் பாட்டில் சமையல் எண்ணெயும் கடையின் ஓர் அறையில் சேமிக்கப்பட்டுள்ளது.
அவை உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாகும்.

ஒரு சில்லறை விற்பனையாளர் கட்டுப்பாட்டு அதிகாரியால் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக 1961 கட்டுப்பாட்டுச் சட்டம் விதி 10 (1) இன் கீழ் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று Kamalludin கூறினார்.

அனைத்து சமையல் எண்ணெய்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அவற்றின் மதிப்பு 4 ஆயிரத்து 567 ரிங்கிட் 50 சென் ஆகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →