தேசியப் பதிவிலாகா யாரையும் தங்களின் நிகராளிகளாகவோ, முகவர்களாகவோ அல்லது இடைத் தரகர்களையோ நியமிக்க வில்லை எனக் கூறியுள்ளது.
நாட்டில் இருக்கும் தங்களில் 212 அலுவலகங்களுக்கும் பொது மக்கள் நேரடியாக வந்து சேவைகளைப் பெறலாம் என அதன் தலைமை இயக்குநர் சம்ரி மிஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பதிவிலாகாவின் சேவைகளைக் கட்டணம் செலுத்தி சில ஆவணங்களை பெற உதவும் தரப்பு எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதை அத்துறை அடையாளம் கண்டுள்ளது.
மலேசியாவின் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அறிந்திடாத வெளிநாட்டு வாசிகளையும் சில உள்நாட்டு வாசிகளையும் இந்த கும்பல் குறிவைத்து செயல்பட்டு வருகின்றது.
அந்த வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் இலாகாவின் அதிகாரப்பூர்வ சின்னம் என்பதால் பலர் அதனை அதிகாரப்பூர்வ நடவடிக்கை என நம்புகிறார்கள் என சம்ரி மிஸ்மான் கூறினார்.
அதிகாரத்துவத்தினர் அந்தக் கும்பலைப் பின் தொடர்ந்து வந்து நடவடிக்கை எடுத்து விடக் கூடாது என்பதற்காக குறுகிய கால விளம்பரங்களைப் பதிவேற்றம் செய்யப்படுகிறதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற விதிமுறைக்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளப் பயனர்கள் தங்களுக்குத் தகவல் தெரிவிப்பதன் மூலம், அவை முடக்கப்பட வழி வகை செய்யும் என சம்ரி மிஸ்மான் மேலும் கூறினார்.








