Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெண் தலைமையிலான கொள்ளைக் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

பெண் தலைமையிலான கொள்ளைக் கும்பல் முறியடிப்பு

Share:

பேரா முவாலிம் மாவட்டத்தில் நிகழ்ந்து வந்த வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் கொள்ளைக் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.
கடந்த வாரம் புதன், வியாழக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளைக் கும்பலுக்கு 25 வயதுடைய ஒரு பெண் தலைமையேற்று இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கெங் தாஷா என்ற அந்தக் கொள்ளைக் கும்பல் , கடந்த ஆண்டிலிருந்து மாநில எல்லைப்பகுதிகளில் பகல் வேளைகளில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளதாக முகமது ஹஸ்னி குறிப்பிட்டுள்ளார்.

Related News