மியன்மார் அதிபர் மின் அவுங் லாயிங்கை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து இருப்பது, மியன்மார் அரசாங்கத்தை மலேசியா அங்கீகரிப்பதாக அர்த்தமல்ல என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நீண்டகாலமாக நிலவி வரும் மியன்மார் அகதிகள் பிரச்சினைக்கு அரச தந்திர வழியில் தீர்வு காண்பதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என்று அவர் கூறினார். மியன்மாரின் 19 இனக்குழுக்களைச் சேர்ந்த அகதிகள் முறையான வழிமுறைகள் மூலம் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்கு இந்தச் சந்திப்பு சாதகமான முடிவுகளைத் தரும் என நம்புவதாகவும் ஃபாஹ்மி தெரிவித்தார்.
இதனிடையே, எகிப்து அதிபர் அப்டேல் ஃபாட்டா எல்-சிசி நாளை மலேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் அன்வார் இப்ராஹிமைச் சந்திக்கும் அவர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பாலஸ்தீன விவகாரம் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.








