Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பூனையை காயப்பபடுத்தியதாக வங்காளதேச ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பூனையை காயப்பபடுத்தியதாக வங்காளதேச ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், அக்டோபர் 02-

பூனையை மோட்டார் சைக்கிளில் கட்டி, சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்று காயப்படுத்தியதாக துப்பபுரவுப்பணியாளரான வங்காளதேச ஆடவர் ஒருவர் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது Monotosh என்ற அந்த ஆடவர், இன்னும் பிடிபடாமல் இருந்து வரும் தனது மற்றொரு சகாவுடன் கூட்டு சேர்ந்து, அந்த வளர்ப்புப் பிராணியை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அவ்விருவரும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 31 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சசாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த வங்காளதேச ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →