விவசாயத் துறையிலும் உணவு விநியோகச் சங்கிலியிலும் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள "இடைத்தரகர்கள்" பங்கை அகற்றுவது மிகவும் கடினம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது
நடப்பில் இடைத்தரகர்களின் பங்கைக் குறைக்க தற்போதுள்ள விவசாய கூட்டுறவு சங்கங்களால் இயலவில்லை என விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகம்மட் சாபு தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்களின் பங்கு புதிதல்ல. காலம் காலமாய் இருந்து வருகின்ற வழக்கம். எனவே ஒரே நேரத்தில் இடைத்தரகர்களை முற்றாக அகற்றுவது எளிதான காரியம் அல்ல. கூட்டுறவு அமைப்புகள் அதில் ஒரு சிறு அளவிலேயே வெற்றி கண்டுள்ளது என அமைச்சர் முகம்மட் சாபு குறிப்பிட்டார்.
கூட்டுறவு கழகங்கள் அமைக்கப்படுவது அதிகம். ஆனால், அதன் செயல்பாடுகள் வெற்றி காண்பதில் பாதியிலேயே நின்று விடுகின்றன என இன்று நாடாளுமன்றத்தில் முகம்மட் சாபு தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் தேசியக் கூட்டணியின் பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் ஹமின் ஹமிட் முன்வைத்த கூடுதல் கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.








