ஒவ்வொரு வாரமும் ரஹ்மா விற்பனைத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக, புறநகர் பகுதிகளுக்கு அது விரிவு படுத்தப்பட வேண்டும் என துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் பரிந்துரைத்துள்ளார்.
பட்டணத்தில் இருந்து தூரமாக இருக்கும் புறநகர் பகுதி மக்களுக்கு ஏற்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வறிய நிலை மக்கள் பயன்பெறும் வகையில் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் வழி ரஹ்மா விற்பனைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கலின் அத்தியாவசியப் பொருட்கள் மலிவான விலையில் இந்தத் திட்டத்தின் வழி விற்கப்படுகிறது.
பெரிய பல்பொருள் அங்காடிகளின் ஒத்துழைப்புடன் ரஹ்மா விற்பனை அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு மாநில சட்டமன்றத்தின் புறநகர் பகுதியிலும் ஒவ்வொரு வாரமும் நடமாடும் அடிப்படையில் நடைபெற வேண்டும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.








