கோலாலம்பூர், டிசம்பர்.16-
பத்து ஆண்டுகளுக்கு முன்பு Daesh தீவிரவாதக் கும்பலுக்கு பண வசூல் செய்த குற்றத்திற்காக வெல்டிங் பணியாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
40 வயது முகமட் ஸைய்ருல் மாஹ்முட் என்ற அந்த வெல்டிங் பணியாளர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நூருல்ஹூடா நுர் அனி இத்தீர்ப்பினை வழங்கினார்.








