Jul 29, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தின் முன்புறம் சண்டையிட்ட ஐவர் கைது !
தற்போதைய செய்திகள்

உணவகத்தின் முன்புறம் சண்டையிட்ட ஐவர் கைது !

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
கடந்த திங்கட்கிழமை ஜொகூர் பாருவில் உள்ள பன்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றின் முன் 5 ஆடவர்கள் சண்டையிட்டுக் கொண்டதற்குக் கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்றும், அதற்கு முந்தைய நாளிலும் நான்கு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

இவ்வலாரம் குறித்து ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் ராவுப் செலமாட் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். தமது தர[[உக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில், 17 வயது முதல் 43 வயது வரையிலான ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு ரோத்தான் கட்டைகள், இரு கைப்பேசிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த ஐவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டை மூண்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த ஐவரில் ஒருவருக்கு 3 குற்றப் பிண்ணனி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஐவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என ரவுப் குறிப்பிட்டார்,

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

உணவகத்தின் முன்புறம் சண்டையிட்ட ஐவர் கைது ! | Thisaigal News