Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சைபர் ஜெயா பல்லைக்கழக மாணவி மரணம்: முழு அறிக்கைக்காக உயர்க்கல்வி அமைச்சு காத்திருக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சைபர் ஜெயா பல்லைக்கழக மாணவி மரணம்: முழு அறிக்கைக்காக உயர்க்கல்வி அமைச்சு காத்திருக்கிறது

கோலாலம்பூர், ஜூன்.26-

சைபர்ஜெயா பல்லைக்கழக மாணவி ஒருவர், தாம் தங்கியிருந்த விடுதியில் மரணம் அடைந்தது தொடர்பில் போலீஸ் துறையின் முழு அறிக்கைக்காக உயர்க்கல்வி அமைச்சு காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் பொறுப்பில் விடப்படும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், பாதுகாப்பை மேம்படுத்தவும், அந்த மாணிவியின் மரண அறிக்கை மிக முக்கியம் என்று உயர்க்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 20 மதிக்கத்தக்க அந்த மாணவி, சைபர்ஜெயா பல்லைக்கழகத்திற்கு அருகில் உள்ள மாணவர் தங்கும் விடுதியான ஒரு கொண்டோமினியம் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நேற்று காலை 10 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டதாக போலீசாரால் உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியின் மரணம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்லைக்கழகங்களின் வளாகங்களில் குறிப்பாக மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து உயர்க்கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →