2030 ஆம் ஆண்டுக்குள், ஊழியர் சேமநிதி உறுப்பினர்களில் 10 பேரில் 6 பேர், 60 வயதில் குறைந்தபட்ச அடிப்படை சேமிப்பான ரிங்கிட் 390,000 தொகையை எட்ட வேண்டும் என்று மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது, 10 பேரில் நால்வருக்கு அருகிலான உறுப்பினர்கள் இந்த இலக்கை எட்டும் நிலையில் இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஓய்வுக்காலத்தில், பல மலேசியர்கள் தங்களின் சேமிப்பு போதாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற ஊழியர் சேமநிதியின் அனைத்துலக சமூக நல மாநாட்டில் பிரதமரின் உரையை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் வாசித்தார்.
முறையான வேலை வாய்ப்புக்கு வெளியே பணியாற்றும் கோடிக்கணக்கான மலேசியர்களையும் உள்ளடக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.








