மருத்துவர்கள் ஆலோசனைப்படி, தாம் தற்போது ஓர்வில் இருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கிராம வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அவர் இந்தத் தகவலை தமது முகநூல் பதிவின் வாயிலாகத் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சையை முடித்த தமக்காக இறைவனை வேண்டிக்கொண்ட அனைவருக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் படத்தை அந்த முகநூல் பதிவில் ஸாஹிட் இணைத்திருந்தார்.
ஆனால், தாம் மேற்கொண்ட அறிவை சிகிச்சை குறித்து எந்த மேலதிகத் தகவலையும் அம்னோவின் தலைவருமான அவர் அதில் பதிவிடவில்லை.
கடந்த வியாழன் அன்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனது தந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஸாஹிட்டின் மகள் நூரூல் ஹிடாயா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்








