Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் சரிந்து முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் சரிந்து முதியவர் மரணம்

Share:

கார் கவிழ்ந்து கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் கிள்ளான், பண்டமாரான் பகுதியில் உள்ள ஜாலான் புக்கிட் கெராயோங் சாலையில் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட முதியவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் கல் கட்டுமானத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்தைக் கண்ட பொதுமக்கள் காரை நிமிர்த்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கார் முதியவருடன் அருகிலிருந்த கால்வாய்க்குள் சரிந்து விழுந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் முதியவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இது குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை