May 21, 2026
Thisaigal NewsYouTube
பத்தர்களின் பாதுகாப்பு கருதியே ஆலயம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

பத்தர்களின் பாதுகாப்பு கருதியே ஆலயம் மூடப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஸ்தாபாக், டானாவ் கோத்தா, ஸ்ரீ முருகன் ஆலயம், பக்தர்களின் பாதுகாப்பு கருதியே கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. தற்போது ஆலயம் மறுபடியும் திறக்கப்பட்டுள்ளதாக ஆலயத் தலைவர் இராமச்சந்திரம் மணியம் விளக்கம் அளித்துள்ளார்.

அன்றைய தினம் இரவு 7 மணியளவில் கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி, ஆலயத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர், ஓர் அவசரக்கூட்டத்தை நடத்தி, 2016 ஆம் ஆண்டு உறுப்பினர்களை கொண்டு முன்னாள் துணைத் தலைவர் மூலமாக ஆலய நிர்வாகப்பொறுப்பிற்கு ஒரு தற்காலிக குழு ஒன்றை அமைப்பதற்கு திட்டம் கொண்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக இராமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுவும் அந்த கூட்டம் ஆலய வளாகத்திலேயே நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் திட்டமிட்டு இருந்தனர். உண்மையிலேயே
இப்படியொரு கூட்டம் நடத்தப்படுவது ஆலயத்தின் சட்டவிதிகளுக்கு முரணானதாகும் என்று ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஆலயத்தின் முக்கிய பொறுப்பாளர்களுடன் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இராமச்சந்திரன் இதனை குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை பக்தர்கள் கோயிலுக்கு அதிகளவில் வருகை தரும் நாளாகும். அன்றைய தினம் இப்படியொரு சட்டவிரோதக்கூட்டம் நடத்தப்பட்டு, ஆலயத்தின் நடப்பு நிர்வாகத்துடன் தகராற்றில் ஈடுபட்டு, விரும்பத் தகாத சம்பவம் ஏதும் நடந்து விடக்கூடாது. அப்படி நடந்தால் அது பக்தர்களின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும் என்று கருதியே ரொஸ் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தப் பின்னர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டானவ் கோத்தா, ஸ்ரீ முருகன் ஆலயத்தின் முன் வாசல் வளாகம் மூடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு வாசலில் ஒட்டப்பட்டதாகவும் இராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

ஆலய நிர்வாகத்தைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை ஆண்டுக்கூட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமது தலைமையிலான ஆலய நிர்வாகம் தற்போது முறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கான எழுத்துப்பூர்வமான ஆவணங்களையும் ஆலயத்தின் கெளரவ செயலாளர் எஸ். சந்திரசேகரனுடன் இணைந்து இராமச்சந்திரன் அந்த ஆதாரங்களை செய்தியாளர்களிடம் காட்டினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்