கோலாலம்பூர், ஜனவரி.09-
தனது நான்கு வயது வளர்ப்புப் பேரனை அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொன்ற நைஜீரியப் பிரஜைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்தக் கொடூரச் சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி காலை 8.15 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் நிகழ்ந்தது.
Ibekwe Emeka Augustine என்ற அந்த 48 வயது நைஜீரியர் தனது தனது மனைவியின் முன்னிலையிலேயே அந்தச் சிறுவனை மூன்றாவது மாடியிலிருந்து கீழே தூக்கி எறிந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நைஜீரியர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








