Oct 14, 2026
Thisaigal NewsYouTube

32 சொஸ்மா கைதிகள் கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கிள்ளான், பிப்.20-

TR Gang என்று முத்திரை குத்தப்பட்டு, சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகள், இன்று கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களுக்கு எதிரான விசாரணை தொடர்பில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட 32 கைதிகள், சிறைச்சாலையில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டதாக நீதிபதியிடம் நேரடியாக புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தடுப்புக்காவலில் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கைதிகள் தாக்கப்பட்டால் போலீசில் புகார் செய்யும்படி நீதிபதி நோர்லீசா ஒத்மான் உத்தரவிட்டு இருப்பதாக அந்த 32 சொஸ்மா கைதிகளில் 15 பேரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் தி. ஹார்பால் சிங் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சந்தேகத்தின் பேரில் இந்த 32 பேரும் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தேதியை நிர்ணயிப்பதற்காக கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டனர்.

முன்னதாக, சிறைச்சாலையில் தாங்கள் தாக்கப்பட்டதற்காக சொஸ்மா கைதிகள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதைதையும் நீதிபதியின் மேலார்ந்த கவனத்திற்கு வழக்கறிஞர் ஹர்பால் சிங் கொண்டு வந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை