Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்
தற்போதைய செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

Share:

ஈரானின் ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் நாடு திரும்ப அனுமதிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தொலைபேசி வாயிலாக உரையாடியதைத் தொடர்ந்து இந்தத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த பெட்ரோனாஸ், MISC மற்றும் சபுரா எனர்ஜி ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்த எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள், எந்த நேரத்திலும் நீரிணையை விட்டு வெளியேற ஈரான் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

முன்னதாக உரமேற்றி வந்த மலேசியக் கப்பல் ஒன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டது. தகவல் தொடர்பு சிக்கல்கள் மற்றும் அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசல் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன முகமட் ஹசான் மேலும் கூறினார்.

Related News