Oct 17, 2026
Thisaigal NewsYouTube

14 வயது மாணவி பாலியல் பலாத்காரம் : நான்கு இளைஞர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
14 வயது மாணவி பாலியல் பலாத்காரம் : நான்கு இளைஞர்கள் கைது

பினாங்கு, நவ.12-


பதிநான்கு வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் சுங்கை ஆராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணுக்கு நன்கு அறிமுகமான இளைஞர் மற்றும் அந்த இளைஞரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

20 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு இளைஞர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை தனக்கு அறிமுகமான ஆடவருடன் வெளியே சென்ற அந்தப் பெண், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தை பார்வையிட்டப்பின்னர் சுங்கை ஆராவிற்கு ஒரு காலி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, கும்பல் ஒன்றினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →