கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்தில் 98 வங்காளதேசிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.
நேற்று காலையில் சுற்றுப் பயணிகள் போர்வையில் மலேசியாவிற்குள் நுழைய முயற்சி செய்த அந்த 98 வங்காளதேசப் பிரஜைகளும் கேஎல்ஐஏ ஒன்றிலேயே எல்லைப் பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
அந்த 98 வங்காளதேசப் பிரஜைகளும், தாயகத்திற்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும், எந்த ஹோட்டலில் தங்கப் போகிறார்கள் என்பதற்கான விவரங்களையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.








