புத்ராஜெயா, அக்டோபர்.15-
பள்ளிகள் மற்றும் கல்விக் கழகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு பேரரசியார் ராஜா ஸாரித் ஃசோபியா வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் நிகழும் பாலியல் சம்பவங்கள் மக்களுக்கும், நாட்டிற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தினால் இவ்விவகாரத்தைக் கையாள வேண்டிய அவசியம் குறித்து பேரரசியார் வலியுறுத்தியிருப்பதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில் பள்ளிகள், கல்விக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








