கோத்தா பாரு, ஆகஸ்ட்.05-
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கிய ஆறாம் படிவ மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டில் புதியதாக கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்கு பள்ளி தொடக்க உதவி நிதியாக 150 ரிங்கிட்டை கல்வி அமைச்சு தொடர்ந்து வழங்குகிறது.
பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் பெற்றோர், பராமரிப்பாளர்களுக்கான சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் வாயிலாக இந்தத் தொகை ஒப்படைக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
பிள்ளைகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ வர முடியாத பட்சத்தில் மாணவர்களிடம் அந்தத் தொகை வழங்கப்படும். எனினும் அதற்கான ஒப்புதல் கடிதத்தை அவர்களின் பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.








