May 21, 2026
Thisaigal NewsYouTube
இரு போலீஸ்காரர்கள் தற்காலிகமாக பணி நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

இரு போலீஸ்காரர்கள் தற்காலிகமாக பணி நிறுத்தம்

Share:

வெளிநாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தது மற்றும் அந்த மாணவின் ஆண் நண்பரை மிரட்டி பணத்தை பறித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இரண்டு போலீஸ்காரர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

இந்த இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்று Hussein Omar குறிப்பிட்டார்.

Bukit Ampang View வில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் அந்த வெளிநாட்டு மாணவி, தனது ஆண் நண்பருடன் பயணித்துக்கொண்டிருந்த போது, அவர்களை போக்குவரத்து குற்றத்திற்காக அந்த இரு போலீஸ்காரர்களும் தடுத்து நிறுத்தியுள்ளனர். .

பின்னர் இருவரும் விசாரணை என்ற பெயரில் ஆளுக்கொருவரை அழைத்து சென்றனர். ஒருவர், கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்த வேளையில் மற்றொருவர் அந்தப் பெண்ணின் ஆண் நண்பரின் பணத்தை மிரட்டிப் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News