Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில்  ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை: பாஸ் தலைவர் அப்துல் ஹாதி அவாங்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை: பாஸ் தலைவர் அப்துல் ஹாதி அவாங்

Share:

ஜோகூரில் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், தாங்கள் போட்டியிடும் 11 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஒரு 'அறிவுரை கூறும்' எதிர்க்கட்சியாகச் செயல்படவே இலக்கு கொண்டுள்ளதாகவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாதி அவாங் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 56 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 29 இடங்கள் தேவை. ஆனால், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் 11 இடங்களிலும், பெர்சத்து 16 இடங்களிலும்,, எம்ஐபிபி 5 இடங்களிலும், பெஜுவாங் ஓர் இடத்திலும் என மொத்தம் 33 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றன.

பெரிக்காத்தான் நேஷனலின் இந்த முடிவு, அவர்கள் ஆட்சி அமைக்கும் எண்ணத்தில் இல்லை என்பதைத் தொடக்கத்திலேயே தெளிவாகக் காட்டுவதாக ஜோகூர் உம்னோ இளைஞரணி தலைவர் நூர் அஸ்லீன் அம்ப்ரோஸ் விமர்சித்துள்ளார்.

Related News