Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியச் சமூகத்திற்கு புதிய முயற்சிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக 40 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளது
தற்போதைய செய்திகள்

இந்தியச் சமூகத்திற்கு புதிய முயற்சிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக 40 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-

13வது மலேசியத் திட்டம், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திறன் மேம்பாடு, கல்வி, தொழில்முனைவோர் மற்றும் சமூகத் திட்டங்கள் மூலம் இந்தியச் சமூகம் உட்பட எந்த இனமும் ஓரங்கட்டப்படுவதில்லை என்பதை உறுதிச் செய்கிறது என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறைத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

மலேசியா மடானி கட்டமைப்பின் கீழ் உள்ள அணுகுமுறை இந்தியச் சமூகத்தின் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதியை நிரூபிக்கிறது என்று ரமணன் கூறினார்.

இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பதைப் போல எந்த இனமும், குறிப்பாக இந்தியச் சமூகம், இதுவரை ஓரங்கட்டப்படவில்லை என்பது தெளிவாகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் STEM கல்வி மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்கிய திவெட் TVET கல்வி உள்ளிட்ட திறன் மேம்பாடு உட்பட பல திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தியச் சமூகத்தின் வளர்ச்சியானது, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவை மட்டும் சார்ந்து இருப்பதோடு அல்லாமல் பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசாங்கத்தின் பிற ஏஜென்சிகளையும் உள்ளடக்கியது என்று ரமணன் விளக்கினார்.

மடானி கட்டமைப்பு மிகவும் வியூகம் நிறைந்த மற்றும் பயனுள்ள ஒரு புதிய அணுகுமுறையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில் இந்திய கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 5 மில்லியன் ரிங்கிட், தேசிய ஆரம்ப மாதிரி தமிழ்ப்பள்ளிகளின் ஐசிடி ICT ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு 5 மில்லியன் ரிங்கிட், இந்து வழிபாட்டுத் தலங்களைச் சமூக மையங்களாக மேம்படுத்துவதற்கு 20 மில்லியன் ரிங்கிட், அத்துடன் B40 குடும்பங்களைச் சேர்ந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக ஒரு முறை வழங்கக்கூடிய ஆயிரம் ரிங்கிட் உதவித் திட்டம் உட்பட நான்கு புதிய திட்டங்களுக்கு கூடுதலாக 40 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ரமணம் குறிப்பிட்டார்.

Related News