Aug 2, 2026
Thisaigal NewsYouTube
1 பில்லியன் வெள்ளிக்காக அம்னோவின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை போவார்களா ?
தற்போதைய செய்திகள்

1 பில்லியன் வெள்ளிக்காக அம்னோவின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை போவார்களா ?

Share:

அரசாங்கத் தரப்பில் இருக்கும் அம்னோவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கூட்டணியை ஆதரிப்பார்கள் எனக் கூறப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயலில் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் இறங்க மாட்டார்கள். அவ்வாறு நடப்பதற்கு சாத்தியமே இல்லை. காரணம், 15 பொதுத் தேர்தலுக்கு முன்னரே உடன்படிக்கை ஒன்றில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். எனவே, அதனை அவர்கள் மீற சாத்தியம் இல்லை என அகமட் மலான் குறிப்பிட்டார்.

ஒரு வேளை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த உடன்படிக்கையை மீறி செயல்பட வேண்டுமே என்றால், தேசியக் கூட்டணி தலா 1 பில்லியன் வெள்ளியைக் கொடுத்தால் மட்டுமே சத்தியம். காரணம், முன்னர் குறிப்பிட்ட உடன்படிக்கையின்படி, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 மில்லியன் மதிப்பிலான உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டுள்ளார்கள் என்றார் அவர்.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து 30 பேரும் தேசியக் கூட்டணிக்கு ஆதரவாக மாறினாலும்கூட, இன்னும் 117 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். எப்படியும் நடப்பு அரசாங்கம் கவிழாது, கை மாறாது என்றார் அவர்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு