கோலாலம்பூர், நவம்பர்.18-
கோலாலம்பூர், தாமான் மிஹார்ஜா பகுதியில் உள்ள உடம்புப்பிடி நிலையங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்றை மலேசிய குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.
இந்த பாலியல் நடவடிக்கையில் 18 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
பிடிபட்டவர்களில் 15 பேர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வியட்நாமியர், இன்னொருவர் இந்தியப் பிரஜை, மற்றொருவர் அந்த வளாகத்தின் பாதுகாவலரான ஒரு மியன்மார் பிரஜை என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இவர்கள் பிடிபட்டது மூலம் கடப்பிதழ்கள், வாடிக்கையாளர் புத்தகம், வளாகத்தின் சாவி மற்றும் பாலியல் நடவடிக்கைக்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








