கோலாலம்பூர், டிசம்பர்.05-
நாட்டின் தேசிய பொருட்காட்சி சாலையான மியூசியம் நெகாராவை பொதுமக்கள் நாளை நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமையும், நாளை மறுநாள் நவம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மடானி அரசாங்கம் நாட்டிற்குத் தலைமையேற்று சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொதுமக்களுக்கு இந்தச் சிறப்புச் சலுகையை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.
நாட்டின் வரலாறு மற்றும் தேசத்தின் அடையாளத்தை வடிவமைத்த பாரம்பரியம் ஆகியவற்றைப் போற்றும் அதே வேளையில் மலேசியர்கள் குறிப்பாக இளையோர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மியூசியம் நெகாராவிற்குத் திரளாக வருகை அளிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு தினங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படாது என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மியூசியம் நெகாரா காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்.








