Oct 9, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கிச் சூடு, 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துப்பாக்கிச் சூடு, 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜூன்.24-

கோலாலம்பூர், ஜாலான் லோக் யூ, செராஸில் கடந்த ஜுன் 17 ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் மரணமுற்றது தொடர்பில் போலீசார், இதுவரை 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து உள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தொடர்ந்து அடையாளம் கண்டு வருவதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

முன்னணி பேரங்காடி வளாகத்தின் முன்புறம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றும் அது தொடர்புடைய விசாரணைக்கு உதவக்கூடியவர்கள் என்று நம்பப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →