Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது
தற்போதைய செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

தாவாவிலிருந்து கோத்தா கினாபாலுவிற்குச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் வழி மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் இரண்டு சீன நாட்டுச் சுற்றுப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சீன நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண்ணையும், 29 வயது ஆணையும் போலீசார் கைது செய்ததாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார். தாங்கள் இருவரும் பக்கத்து பக்க இருக்கையில் அமர்ந்து செல்லும் இருக்கையை மாற்றிக் கொடுக்கும்படி அந்த ஜோடியினர் முன்வைத்த கோரிக்கையை விமானப் பணியாளர்கள் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அவர்களைப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் வழி மிரட்டல் அனுப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஜஸ்மின் ஹுசேன் குறிப்பிட்டார்.

அவ்விருவரையும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News