வியாபார நோக்கத்திற்காக மலேசியாவிற்கு வருகின்ற அந்நிய நாட்டவரகள் , உள்ளூர் பெண்களை திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண்களின் பெயரில் வர்த்தக லைசென்ஸ் பெற்று, வியாபாரம் செய்து வரும் நடவடிக்கையை சிரம்பான் மாநகர் மன்றம் முடக்கும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள் குமார் தெரிவித்தார்.
அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட இத்தகைய வர்த்தக வியூக நடவடிக்கையை முடக்குவதற்கு நடப்பு விதிமுறைகளை சிரம்பான் மாநகர் மன்றம் மேலும் கடுமையாக்கும் என்றும் அருள் குமார் குறிப்பிட்டார்.
தவிர, அந்நிய நாட்டவர்கள் தங்கள் வியாபாரத்தை விஸ்ரிப்பதற்கு உள்ளூர் வியாபாரிகள் தங்கள் வர்த்தக லைசென்சுகளை அவர்களுக்கு வாடகைக்கு விடுவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்ற அருள் குமார் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அந்நிய நாட்டவர்கள் பெயரில் லைசென்ஸ் வெளியிடுவது, அல்லது மற்றவர்களின் லைசென்சுகளில் இவர்கள் வியாபாரம் செய்வது போன்ற செயல்களை சிரம்பான் மாநகர் மன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.








