Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் பாரு மேம்பாடுகளில் மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்!
தற்போதைய செய்திகள்

கம்போங் பாரு மேம்பாடுகளில் மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.18-

கம்போங் பாரு பகுதியின் மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள், மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.

கம்போங் சுங்கை பாருவின் பாரம்பரியமும், மலாய்க் குடியிருப்புப் பகுதியான அதன் வரலாற்றுப் பதிவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் கம்போங் பாரு, மலாய் மக்களின் எழுச்சியின் அடையாளமாக இருந்து வருகின்றது என்றும், இந்த விவகாரத்தில் பரிசீலிக்கப்படும் எந்த ஒரு முடிவிலும், கம்போங் பாருவின் அசல் வரலாறும், பாரம்பரியமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் இன்று சுல்தான் ஷாராஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தை, கவனமாகவும், விவேகமாகவும் கையாளும்படி அவர் அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News