வருகின்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற பொது தேர்தலின் போது பி எஸ் எம் கட்சியுடன் மூடா கட்சி இணைந்து செயல்பட உள்ளதாக அவ்விரு கட்சிகளும் இன்று அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில், வருகின்ற சிலாங்கூர் மாநில சட்டம்னற பொது தேர்தலின் போது பி எஸ் எம் போட்டியிடவுள்ள சட்டமன்ற தொகுதியில் மூடாகட்சி போட்டியிடாது என்ற கூட்டு முயற்சியை உருவாக்கி கொண்டோம் என பி எஸ் எம் கட்சியின் தலைவர் ஜெயக் குமார் தெரிவித்தார்.
மேலும், இந்த இரு கட்சிகளின் கூட்டணியால், எதிர்காலத்தில் புதிய தூய்மையான அரசியல் மலேசிய நாட்டில் நடைபெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும் என அவர் மேலும் கூறினார்.








