May 22, 2026
Thisaigal NewsYouTube
வங்கிப் பணம் களவு, மூவர் கைது
தற்போதைய செய்திகள்

வங்கிப் பணம் களவு, மூவர் கைது

Share:

வங்கி ஒன்றில் சிலரது சேமிப்புக் கணக்கிலிருந்து மொத்தம் 2 கோடியே 20 லட்சம் வெள்ளி காணாமல் போனது தொடர்பில் மேலும் மூன்று நபர்களை அரச மலேசிய போலீஸ் படை கைது செய்துள்ளது.

30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் சபாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையிலிருந்து மேற்கொள்ளபட்ட தேடுதல் நடவடிக்கையில் முதலில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் சபா, கோத்தா கினபாலுவிலும், பெர்லிஸிலும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது தெரிவித்தார்.

இதுவரை கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு அப்பாற்பட்ட நிலையில் மேலும் பலர் கைதாகலாம் என்று அவர் கோடி காட்டினார்.

Related News