கோலாலம்பூர், செப்டம்பர்.13-
மகனின் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளான தந்தை ஒருவர் பரிதாபமாக மாண்டார். இத்துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மைசூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.
உடலில் ஆழமான கத்திக் குத்துக் காயங்களுடன் 62 வயதுடைய நபர், வீட்டின் பிரதான அறையில் இறந்து கிடந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரிட்ஸுவான் காலிட் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த முதியவரின் 24 மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தடயவியல் சோதனைக்குப் பின்னர் அந்த நபரின் உடல் செராஸ், சான்சலர் துவாங்கு மூஹ்ரிஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக ரிட்ஸுவான் காலிட் குறிப்பிட்டார்.
சொத்து தகராற்றின் காரணமாக இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








