கோலாலம்பூர், டிசம்பர்.18-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று புத்ராஜெயாவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை அமைச்சர்களைச் சந்தித்த போது அவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அனைத்து அமைச்சுக்கள், ஏஜென்சிகள் மற்றும் பொதுமக்களுடன் வலுவான பணி உறவைப் பராமரிக்குமாறும், தகவல் தொடர்புகளை மேம்படுத்துமாறும் துணை அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மக்களுக்குத் தெளிவான மற்றும் உண்மையான நன்மைகளைத் தருவதை உறுதிச் செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மேலும் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் எவ்வித அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்றும், அமைச்சுக்களின் கொள்கைகள் மற்றும் அமைச்சின் நிர்வாகம் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்ளுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.








