மலேசியாவின் மானியச் சுமையைக் குறைக்க, தற்போது ஒரு ரிங்கிட் 99 சென்னாக இருக்கும் RON95 பெட்ரோல் விலையை மீண்டும் பழைய அளவான 2 ரிங்கிட் 5 சென்னாக உயர்த்த வேண்டும் என்று உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.
மானியச் செலவுகளைக் குறைக்க பெட்ரோல் விலையை உயர்த்துவது ஒரு சிறந்த மாற்றாக அமையும் என உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் அபூர்வா சாங்கி தெரிவித்துள்ளார்.
தற்போதைய BUDI95 திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அதிக வருமானம் ஈட்டுவோர் இன்னும் அதிகப்படியான மானியப் பலன்களைப் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த விலை மாற்றத்தைச் செய்வது மலேசிய அரசுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








