Sep 25, 2026
Thisaigal NewsYouTube
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி: சோதனக்குப் பின் போலீஸ் பச்சைக்கொடி!
தற்போதைய செய்திகள்

டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி: சோதனக்குப் பின் போலீஸ் பச்சைக்கொடி!

Share:

சுபாங் ஜெயாவில் உள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழக வளாகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும், போலீசாரின் தீவிரப் பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு அங்கு எந்தவொரு வெடிபொருளும் இல்லை என உறுதி செய்யப்பட்டு, பல்கலைக்கழகம் மீண்டும் பாதுகாப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.

நேற்று இதே பகுதியில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஐந்து மணி நேரச் சோதனைக்குப் பின் அது வதந்தி எனத் தேறிய நிலையில், இன்று டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News