ஈப்போ, ஆகஸ்ட்.22-
ஈப்போ, தாமான் செமோர் ரியா, சின் யோங் செங் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தின் குளத்தில் இரண்டு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய அந்த உடன்பிறப்புகள், கடந்த புதன்கிழமை இரவு 8.33 மணியளவில் அந்த குளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்விருவரும் விளையாடுவதற்காக வெளியே சென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.








