Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நஜிப்பிற்கு வீட்டுச் சிறைக்கான வாய்ப்பு: சட்டத்துறைத் தலைவரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது!
தற்போதைய செய்திகள்

நஜிப்பிற்கு வீட்டுச் சிறைக்கான வாய்ப்பு: சட்டத்துறைத் தலைவரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது!

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.13-

நஜிப்பிற்கு வீட்டுச் சிறைக்கான வாய்ப்பு மீண்டும் பிரகாசமாகியுள்ளது. அதற்கான கூடுதல் ஆணை தொடர்பான சட்டத்துறையின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. இந்த முடிவினை மலாயாவின் மூத்த நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹாஷிம், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ ஸாபாரியா முகமட் யூசோஃப், டத்தோ ஹனிபா ஃபாரிகுல்லா ஆகிய மூவர் கொண்ட நீதிபதிக் குழு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுச் சிறை ஆணை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிச் செய்யக் கோரும் நஜிப்பின் மனு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்படும்.

தான் தாக்கல் செய்த மனுவில், சிறைத் தண்டனையை வீட்டிலிருந்து கழிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆணை ஒன்று இருப்பதாக நஜிப் கூறியிருந்தார். இந்த உத்தரவின் நகலை வழங்குமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் நஜிப் இந்த நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கூட்டரசு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, நஜிப்பின் வீட்டுச் சிறைக்கான வாய்ப்பை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

Related News