Dec 4, 2025
Thisaigal NewsYouTube
முகநூல் பக்கக் கருத்துகள்: அக்மால் மீது குற்றம் சாட்டப்படும்
தற்போதைய செய்திகள்

முகநூல் பக்கக் கருத்துகள்: அக்மால் மீது குற்றம் சாட்டப்படும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-

அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அக்மால் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதற்காக அக்மால் மீது குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் முகநூலில் எத்தகைய கருத்துகளை அக்மால் வெளியிட்டார் என்பது குறித்து அது விவரிக்கவில்லை.

Related News