Feb 6, 2026
Thisaigal NewsYouTube
எச்ஆர்டி கோர்ப் உயர்மட்டக் குழுவில் மூன்று பேர் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

எச்ஆர்டி கோர்ப் உயர்மட்டக் குழுவில் மூன்று பேர் பணியிடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

மனிதவள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கோர்ப்பின் மூன்று பேர் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் குறித்த பல்வேறு அறிக்கைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அதன் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

அந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவான பிஏசி, தலைமை தணிக்கையாளர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டதாக எச்ஆர்டி கோர்ப் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கைகளானது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத வரிகளின் மேலாண்மை, Menara Ikhlas கையகப்படுத்தல் மற்றும் எச்ஆர்டி கோர்ப்பின் பங்கு முதலீட்டு மேலாண்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் எச்ஆர்டி கோர்ப் குறிப்பிட்டுள்ளது.

Related News