Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பணக்கார நாடுகளுக்கு மலேசியா உதவுவது வழக்கமான நடைமுறையாகும்- துன் மகாதீர் கிண்டல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.27-

மிகப்பெரிய பணக்கார நாடுகளுக்கு உதவுவது மலேசியாவிற்கு மிக விருப்பமானதாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கிண்டல் செய்துள்ளார்.

மலேசிய நிறுவனமான YTL, பிரிட்டனில் 21.96 பில்லியன் ரிங்கிட்டிற்கு முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருப்பது குறித்து கருத்துகையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரிட்டனில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதை தாம் வரவேற்பதாகவும், இந்த முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக அந்த நாட்டிற்கு புதியதாக 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் துன் மகாதீர் குத்தலாக கூறினார்.

பணக்கார நாடுகளுக்கு உதவுவது மலேசியாவிற்கு கைவந்த கலையாகும். சுத்திகரிக்கப்படாத தண்ணீரை தலா ஆயிரம் gellen- க்கு 3 காசு வீதம் 250 மில்லியன் கேளன் நீரை சிங்கப்பூருக்கு விற்பனை செய்கிறோம். அதே நீரை அந்நாடு சுத்திகரித்து மலேசியாவிற்கு ஆயிரம் கேளனுக்கு தலா 36ரிங்கிட்டிற்கு மலேசியாவிடம் திருப்பி விற்பனை செய்கிறது. இதுதான் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசமாகும். மற்றவர்களுக்கு உதவுவதே மலேசியாவின் விருப்பமாகும்.

பிரிட்டன், சிங்கப்பூருக்கு அடுத்து தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மலேசியா உதவி வருகிறது என்று துன் மகாதீர் சீண்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு